Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

ஸ்ரீ தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இந்திய பிரபலங்கள் | InandOut cinema

உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, மர்மமான முறையில் காலமானார். ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு கொண்டு வரபட்டது. இந்நிலையில் மும்பையில் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
sridevi death newsஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தி திரை உலகைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக திரண்டு வந்திருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். ரசிகர்கள் செல்போன், காமிரா எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இடையிடையே திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மதியம் 12.30மணி வரை ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், சுஸ்மிதா சென்,வெங்கடேஷ், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, சர்தா கபூர், வித்யா பாலன், ரேகா, அஜய் தேவ்கான் - கஜோல், தபு, ஜான் ஆபிரகாம், விவேக் ஓபரோய் மற்றும் பலர் வந்து அஞ்சலி செலுத்தினர். மதியம் 1 மணிக்கு ஸ்ரீதேவி உடலுக்கு போனி கபூர் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் நடத்துகிறார்கள்.  2 மணிக்கு பிறகு ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம் தொடங்கும். ஸ்ரீதேவி உடலை தகனம் செய்ய மும்பை வில்லேபார்லி மேற்கு பகுதியில் எஸ்.வி.சாலையில் உள்ள வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல்
ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்படும் என கூறப்படுகிறது.









விவரம் உள்ளே Click Here 

sridevi and our husband news



மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்










No comments:

Powered by Blogger.