6 மாநிலங்களில் மக்கள் நீதி மய்யம்! கமல் கணவு பளிக்குமா? | InandOut cinema
சென்னை: கமல்ஹாசன் கடந்த வாரம் தனது புதிய கட்சியின் கொடியை எற்றி பெயர்யை அறிவித்தார். அப்போது அதற்கான விளக்கத்தை அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி மதுரை ஒத்தக்கடை பிரம்மாண்ட மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் 40 அடி கம்பமத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றினார். பின்னர், கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார்.
கமல் அறிமுகப்படுத்திய கட்சியின் கொடியானது வெள்ளை நிறத்தில் 6 இணைந்த கைகளுடன் உள்ளது. இதில், 3 சிவப்பு நிறத்திலும், 3 கைகள் தூய வெல்லை நிறத்தில் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக பிடித்துகொண்டபடி உள்ளது.
கொடிக்கு விளக்கம் அளித்து கமல் கூறுகையில்; ‘எங்கள் கட்சிக்கொடி தென்னிந்திய மேப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 கைகள், 6 மாநிலங்களை குறிக்கிறது. நட்சத்திரத்தின் ஆறு முனை, மக்களை குறிக்கிறது. மக்களின் நீதியை மையமாக வைத்து துவங்கப்பட்ட கட்சி இது. எனவேதான், நட்சத்திரம் மையமாக இருக்கிறது. நீதிக்கட்சி போன்ற மூத்த கட்சிகளின் அறிவுறைகளை கையாண்டு கட்சிக்கொடியை உருவாக்கி உள்ளோம்’ என்றார்.
இதன்மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும் தனது கட்சியை கமல் விரிவு படுத்தலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
விவரம் உள்ளே Click Here
Tamil Web Media News @whatsapp 7338789767




No comments: