Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணீர் கிடையாது - சுப்ரமணியசுவாமி | InandOut cinema

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேட்டி அளித்த சுப்ரமணிய சுவாமி கூறியதாவது : தமிழக அரசுக்கு தண்ணீர் வேண்டுமானால் மாற்று வழிகள் குறித்து யோசனை வழங்கத் தயார். 
subramiya swamiஆனால், காவிரி தண்ணீர்தான் வேண்டுமென்றால், அது கிடைக்கப்போவதில்லை. ஐஐடி-யில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது தவறில்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டதுதான் ஐஐடி என சுப்ரமானிய ஸ்வாமி தெரிவித்தார். தமிழ் நாட்டில் உள்ள ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசிமில்லை என்றால் சமஸ்கிருத பாடலும் அவசியமில்லை என பொது மக்களும் நெட்டிசன்களும் சுப்பிரமணிய ஸ்வாமியை இணையதளத்தில் வசைபாடி வருகின்றனர்.







சுப்ரமணிய சுவாமி செய்தி Click Here




மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்





Powered by Blogger.