Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

தளபதிக்கு ஒரு ரசிகையின் கடிதம்! | InandOut cinema

சென்னை: வழக்கமாக தினமும் காலை அலுவலகம் வந்தவுடன் முதலில் ஆன் செய்வது ஃபேனை அல்ல. டிவிட்டரை தான். ஏனா நமக்கு அதுதான் சோறும்.. சோர்சும்..
இன்று காலை டிவிட்டரில் பதிவுகளை பார்த்துகொண்டிருந்த போது, பிரியங்கா ஜே என்பவரின் பதிவு கண்ணில் பட்டது தொடர்ந்து படித்தபோது அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது
‘விஜய் அண்ணா எனக்கு ரொம்ப முடியாத சூழ்நிலை அதனால் தான் உதவி தேவை உங்க கிட்ட கேக்குறேன் விஜய் அண்ணா நீங்க நெனச்சா கண்டிப்பா எனக்கு உதவி பண்ணுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு உங்களால் முடிந்த உதவி பண்ணுங்கள் நான் காத்திருக்கிறேன் தலைவா உங்களின் பதிலுக்காக’ தொடர்புக்கு: 9789017672
உடனே போனை எடுத்து மேற்கண்ட எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசினேன். பிரியங்கா ஜே சுனிதா பேசினார். முதலில் சற்று யோசித்தவர் பின்னர் தனது பிரச்சனைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
பிரியங்காவுக்கு சொந்த ஊர் சென்னை, கோடம்பாக்கம். தீவிர விஜய் ரசிகர், இவரின் டிவிட்டர் பக்கத்தில் விஜய் செய்திகளை தவிர மற்ற பதிவுகளை பார்க்க முடியாது. ஏன் அவரது புரொபைலே தளபதி படம் தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு 250 போஸ்டுகளை போடுவாராம்...
அப்பா ஜெய்சங்கர், அம்மா லட்சுமி. கடந்த 2010 இருவரும் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டனர். (முழு விபரத்தை தளபதியிடம் தான் சொல்வேன் என்று கூறிவிட்டதால் வற்புறுத்த வில்லை)
அதன்பிறகு சில காலம் கோவை, சோலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
அப்போது ஒரு விபத்தில் அவரது காலில் அடிபட்டு முட்டி முறிந்துவிட்டது. கோவை மெடிக்கல் சென்டரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் பணம் செலவு பண்ண முடியாததால் சிகிச்சையை முடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் 4 ஆண்டுகளாக பிரியங்கா நடமாட முடியாமல் உள்ளார். அவருக்கு மூட்டு மாற்று சிகிச்சை செய்தால் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப முடியும். அதற்கு 7 லடசம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
தற்போது, பிரியங்கா ஜே தளபதி பற்றிய செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி கொண்டு தோழி ஒருவரின் உதவியால் புனேயில் உள்ளார்.
விவரம் உள்ளே Click Here

vijay news

மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்








No comments:

Powered by Blogger.