பழம்பெரும் நடிகை ஜமுனாவிற்கு பதிலடி தந்த நடிகை கீர்த்தி சுரேஷ் | InandOut cinema
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மய்யமாக வைத்து உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இன்னிலையில் சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு தகுதி இல்லை என்று பழம்பெரும் நடிகை ஜமுனா கண்டித்துள்ளார்.
சாவித்திரி கதாபாத்திரத்தில் எந்த நடிகையாலும் நடிக்க முடியாது. தெலுங்கு மொழி தெரியாத கீர்த்தி சுரேஷால் எப்படி நடிக்க முடியும் என்று அவர் கேட்டு இருந்தார். இதற்கு கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : சாவித்திரியாக நடிக்கும் முன்பே அவரது வாழ்க்கை வரலாறு புத்தகங்களை தேடிப்பிடித்து படித்தேன். சாவித்திரியின் மகள் சாமுண்டீஸ்வரியையும் சந்தித்து பேசினேன். சாவித்திரியின் நடை உடை பாவனைகள் எப்படி இருக்கும் என்று அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொன்னார். சாவித்திரியைப்போல் நடிக்க நிறைய பயிற்சிகளும் எடுத்தேன். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி எனக்கு 4 பக்க கடிதம் எழுதி அனுப்பினார். அந்த கடிதம் மூலம் அவரைப்பற்றி மேலும் பல தகவல்கள் எனக்கு தெரியவந்தன. சாவித்திரிக்கும் எனக்கும் ஒரே பழக்க வழக்கம் இருப்பதை தெரிந்துகொண்டேன். சாவித்திரிக்கு நீச்சல் பிடித்து இருந்தது. எனக்கும் அதில் விருப்பம் உண்டு. சாவித்திரி கிரிக்கெட் விளையாடுவார். நானும் பள்ளியில் அதை விளையாடி இருக்கிறேன். சாவித்திரிக்கு கார் ஓட்டுவதில் ஆர்வம் உண்டு. எனக்கும் கார் ஓட்ட பிடிக்கும். எனவே சாவித்திரியாக நடிக்க எனக்கு தகுதி உள்ளது என்று கருதுகிறேன்.
விவரம் உள்ளே Click Here
மேலும் சுவாரசியமான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
Tamil Web Media News @whatsapp 7338789767


