ஸ்ரீ தேவி இறுதிச்சடங்கில் பங்கேற்கும் கமலை வருத்தேடுக்க காத்திருக்கும் நெட்டிசன்கள் | InandOut cinema
உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பின் காரணமாகக் காலமானார். ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ரஜினி நேற்றே மும்பை சென்றுவிட்டார்.
அதைத்தொடர்ந்து நடிகர் கமலும் மும்பையில் நடக்கும் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்காக அவர் இன்று மும்பைக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது போல் மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் சென்றுள்ளார். ரஜினி, கமல் இவர்களைத் தவிர தமிழ் திரையுலகைச் சேர்ந்த மேலும் பல பிரபலங்கள் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை அவர் கலந்துகொண்டால் நெட்டிசன்களின் பேச்சுக்கு ஆளாகவேண்டும். ஏனென்றால் சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் கட்சி பெயர், சின்னம், கொள்கை முதலவற்றை சில நாட்கள் முன்னர் வெளியிட்டார். அப்பொழுது நிருபர்கள் கலாம் அய்யாவின் இறுதி சடங்குகளில் ஏன் பங்கேற்கவில்லை என கேட்டபோது இறுதி சடங்குகளில் பங்கேற்பது எனக்கு வழக்கமில்லை என கூறினார். ஆனால் சிவாஜி இறுதிச்சடங்கு உட்பட பலரது சடங்குகளில் கலந்துகொண்டுள்ளார். அதற்க்கே பலர் அவரை வசைபாடிவிட்டனர். இதற்க்கு என்ன செய்ய போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
பாலிவூட் போன ஸ்ரீ தேவி கோலிவுட்டை மறந்துட்டார் - பாரதிராஜா
மேலும் சுவாரசியமான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
மேலும் சுவாரசியமான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
Tamil Web Media News @whatsapp 7338789767


