Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

நடிகை குஷ்பூ சீமான் இணைந்து நடிக்கவிருக்கும் படம் என்னனு தெரியுமா | InandOut cinema

தமிழ் நாட்டில் மறக்கப்பட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகும். டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை 'டிராபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்தவர். ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர். 
kushboo and seeman new filmஇப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் , எஸ்.வி.சேகர், ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாபு, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் 'டிராபிக் ராமசாமி ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சினிமாத்துறையிலிருந்து அரசியல் களத்துக்குப் போய் தீவிரமாகச் செயல்படுபவர் சீமான். இதே போல சினிமா தயாரிப்பு, அரசியல் என்று இருப்பவர் நடிகை குஷ்பு. இவர்கள் இருவரும் அரசியலில் கொள்கை ரீதியாக வெவ்வேறு இரு முனைகளில் நின்றவர்கள். இவர்கள் இப்போது இப்படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதையும் நோக்கமும் அவர்களைக் கவர்ந்து நடிக்க வைத்துள்ளது. இவர்கள் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார் என்பது கூடுதல சிறப்பாகும்.







See More Detail Click Here

seeman and kushboo new film


 

மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்



No comments:

Powered by Blogger.