கார்த்திக் சுப்புராஜ் ரஜினி இணையும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனா | InandOut cinema
குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்குரி. சைலன்ட் திரில்லர் ஜானராக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் , பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக சன் பிச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுவரை வந்த கார்த்திக் சுப்புராஜ் படங்களில் விஜய் சேதுபதி இல்லாமல் இருந்ததில்லை. அதனால் இந்த படத்திலும் விஜய் சேதுபதி இருப்பார் என கூறப்படுகிறது. இதனை விஜய் சேதுபதி ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர். ஆனால் படக்குழுவினரிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: