விறுவிறுப்பான கதை வித்தியாசமான தகவல்கள் படம் வெற்றிமாறன் | InandOut cinema
சென்னை: லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு குணசேகரன். டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.
படத்தில் ஹீரோவின் காதலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அவர்களால் ஹீரோ பல பிரச்னைகளை சந்திக்கிறார். அவர்களிடம் இருந்து உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்புகிறார். இதுதான் இந்தப்படத்தின் கதை. இதில் கொஞ்சம் ஹாரரும் கலந்திருக்கிறார்கள்
இயக்குனர் மனோ படத்தில் நிறைய டிவிஸ்கலை கையாண்டுள்ளார்.. அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். இந்தப்படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபிசரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
மேலும் சுவாரசியமான சினிமா தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
Tamil Web Media News @whatsapp 7338789767









No comments: