Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

நடிகை ஸ்ரீ தேவியின் இறப்புக்கு இரங்கலை தெரிவித்த திரை பிரபலங்கள் | InandOut cinema

நடிகை ஸ்ரீ தேவியின் இறப்புக்கு குறித்து இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது : ஸ்ரீதேவியின் இழப்பு இந்திய மக்களுக்கே மிகப்பெரிய இழப்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை மிக சிறந்த நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் மறைவு, இது மறைகின்ற வயதா? என்றுதான் கேட்க தோன்றுகிறது. ஸ்ரீதேவி நம்மிடம் இல்லையே என்பது சினிமா ரசிகர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 16 வயதினிலே படத்திற்கு நாயகி யார்? என்று பேச்சு எழும்போது, நான் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என்றேன். 
sridevi newsஸ்ரீதேவி வேண்டாம் சார்” என்றார். “நான் இருக்கிறேன். தைரியமா நடி என கூறி நடிக்க வைத்தேன். ஸ்ரீதேவியை இந்திய திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதை நினைத்து பெருமை கொள்கிறேன். ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கையில் ஸ்ரீதேவியிடம், “உங்கள் நடிப்பு திறன் இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்க யார் காரணமாக இருந்தார்கள்?” என்ற கேள்விக்கு, “பாரதிராஜாவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்” என்றார். அதை எனக்கு அவர் அளித்த மிகப்பெரிய மரியாதையாக நினைக்கிறேன். எனது மயிலின் (ஸ்ரீதேவி) மறைவை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியின் வாரிசுகள் திரையுலகத்திற்கு அறிமுகமாகின்றனர். ஸ்ரீதேவியின் பெயரை அவர்கள் காப்பாற்றுவார்கள். போனிகபூருக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பாரதிராஜா கூறினார். மேலும் நடிகர் சிவகுமார், விவேக், ரஜினி, கவிஞர் வைரமுத்து, இசைஞானி இளையராஜா, நடிகை குஷ்பூ மற்றும் பலர் ஸ்ரீ தேவிக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் சிரியாவில் உள்நாட்டு போரால் அப்பாவி குழந்தைகள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து எவரும் வாய் திறக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது. ஒரு நடிகையின் உயிருக்கு இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள், 600 க்கம் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் இறந்ததற்கு வை திறக்காதது, வருத்தம் அளிக்கிறது என பொது மக்கள் கூறுகின்றனர்.









See More Detail Click Here 

sridevi images

மேலும் தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் 


http://www.inandoutcinema.com/news/qwertyuiodfghjukxcvbnsdfghjdfghj





No comments:

Powered by Blogger.