Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

துருவநட்சத்திரம் சூட்டிங் முடிந்தது மேலும் தகவலுக்கு | InandOut cinema

சென்னை: இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் சூட்டிங் பணிகள் இன்றுடன் நிறைவடைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு கடந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை, இத்தாலி, துருக்கி, இஸ்தான்புல், ஜார்ஜியா உள்ளிட்ட பல இடங்கள் நடந்து வந்தது. இந்த படத்தில் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் தலையுடன் செம ஸ்டைலாக உள்ளார்.
படபிடிப்பின் போது படக்குழுவினர் பல பிரச்னைகளை சந்தித்ததாக கவுதமே தெரிவித்திருந்தார். அவ்வபோது படத்தின் அப்டேட்களை டிவிட்டரில் அறிவித்தும் வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக படத்தை பற்றி எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்து. தற்போது, படத்தின் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, தற்போது படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை அருகே கோவலத்தில் நடைபெற்று வருகிறது. இத்துடன் சூட்டிங் பணிகள் முடிகிறதாம். அதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் வரும் ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய கவுதம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
See More detail Click Here
Dhruva natchathiram

மேலும் தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் 

No comments:

Powered by Blogger.