ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இளம் இயக்குனர் அதிகாரபூர்வ அறிவிப்பு | InandOut cinema
ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா.
ரஜினி நடித்த காலா படம் வருகிற ஏப்ரல் 27 -ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது என நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் நெல்லை மாவட்ட ரசிகர்களை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை நடிகர் ரஜினி ரசிகர்களை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக சன் பிச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி
ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
See More Detail Click Here
Tamil Web Media News @whatsapp 7338789767



