Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

நான் இந்த நேரத்திற்க்காக தான் காத்திருந்தேன். எ.எல். விஜய் | InandOut cinema

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் கரு. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர் எ.எல்.விஜய் பேசியதாவது : 
saipallavi new movieகரு என் கேரியரில் முக்கியமான படமாக நினைக்கிறேன். கரு படத்தின் கதையை லைகாவிடம் சொன்னேன். இந்த படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்கு தான் பண்ணனும் என்று கூறினார்கள். சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்த படத்துக்காக அணுகினோம். அவர் முதலில் மறுத்து விட்டார். பின் கதையை சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே சாய் பல்லவி தான். அவரை மையமாக வைத்து கதை எழுதும் வகையில் மிகப்பெரிய நடிகையாக வருவார். நிரவ்ஷாவுக்கு 2013லேயே இந்த கதை தெரியும். இந்த நேரத்துக்காக தான் காத்திருந்தோம். எடிட்டர் ஆண்டனி இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சிருக்கார். என்னுடைய மிகப்பெரிய பலம் மதன் கார்க்கி. நான் சொல்ல விரும்புவதை 2 நிமிடங்களில் பாடலாக சொல்லி விடுவார். இசையமைப்பாளர் சாம் படத்துக்கு பொருத்தமான இசையை கொடுத்திருக்கிறார். போஸ்டரில் இருக்கும் குழந்தையும், வெரோனிகாவும் வேறு வேறு குழந்தைகள். நிறைய தேடல்களுக்கு பிறகு இந்த குழந்தையை கண்டுபிடித்தோம். தெய்வத்திருமகள் சாராவுக்கு பிறகு இந்த குழந்தையையும் நீங்கள் கொண்டாடுவீர்கள் என இயக்குனர் விஜய் கூறினார்.

See More Click Here

saipallavi news












Karu Movie Audio Launch | Vijay | Sai Pallavi 



மேலும்  சுவாரசியமான  தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்




















No comments:

Powered by Blogger.