தமிழ் ரசிகர்களை பற்றி கூறும் சாய்பல்லவி | InandOut cinema
லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'கரு'. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், நடிகை சாய் பல்லவி, டியோகிராஃபர் ராஜாகிருஷ்ணன், கலை இயக்குனர் ஜெயஸ்ரீ, படத்தொகுப்பாளர் ஆண்டனி, பாடகி ஸ்வாகதா, நடிகர்கள் ஜெயகுமார், டிஎம் கார்த்திக், பேபி வெரோனிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகை சாய் பல்லவி கூறியதாவது : நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான். தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள். அதனால் நிறைய பொறுப்புகள் இருந்தது. முதல் படத்தை நல்ல படமாக பண்ணனும்னு நினைச்சேன். அதனால் தான் இவ்வளவு தாமதம். படத்தில் நடிக்கும் போது உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றி விட்டோம். பேபி வெரோனிகாவோடு நடிக்கும் போதுஎனக்கு தான் பிரஷர் அதிகம். எனக்கு நடிப்பில் எமோஷன் முதற்கொண்டு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தவர் இயக்குனர் விஜய் தான் என நடிகை சாய் பல்லவி கூறினார்.
விவரம் உள்ளே Click Here
கரு திரைப்படம் இசை வெளியீடு
மேலும் சுவாரசியமான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
Tamil Web Media News @whatsapp 7338789767


