ஐஐடியில் நிகழ்ச்சியில், தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை பின்னணி சாகர்மாலா திட்டமா ? விவரம் உள்ளே | InandOut cinema
சாகர்மாலா திட்டத்தின் கீழ் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழி தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையத்தை சென்னை ஐஐடியில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் மற்றும் சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சாகர்மாலா திட்ட இணை இயக்குநர் கைலாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் முன்னேற்றத்திற்கு துறைமுகங்களை மேம்படுத்துவது முக்கியம் எனவும், நடப்பாண்டில் துறைமுகம் மூலம் 7000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மகாகணபதி பாடல் சமஸ்கிருதத்தில் பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கமளித்துள்ளார். நிகழ்ச்சியில் சமஸ்கிருத மொழியில் பாடப்பட்டது தொடர்பான சர்ச்சை தேவையற்றது என்றும், மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த மொழிகளில் பாடினார்கள் என்றும், நிர்வாகம் தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால் சாகர்மாலா அபாயகரமான திட்டம் என மே 17 இயக்கமும் மற்றும் நாம் தமிழர் கட்சியும் கூறிவருகிறது. சாகர்மாலா திட்டத்தை பற்றி பல மேடைகளில் இவர்கள் இருவரும் பேசி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த சாகர்மாலா பற்றிய விளைவுகளை மறைப்பதற்காக தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஊடகங்கள் பேசி வருவதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tamil Web Media News @whatsapp 7338789767


