தேவ் விமர்சனம்.!!
அட்வென்சர்ஸ் பிடித்த காதாநாயகன், பணம் புகழை விரும்பும் கதாநாயகி இருவருக்குள் ஏற்படும் காதல். இவர்களுக்குள் ஏற்படும் பிரிவு. இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.
அம்மா இல்லாததால் அப்பா பாசத்தில் வளர்ந்த பையன். பாசத்தை அனைவரிடமும் காட்டுபவன். அப்பா ஏமாற்றியதால் அம்மாவுக்கு ஏற்பட்ட கஷ்டம். அதனால் ஆண்களை வெறுக்கும் பெண். இந்த இருவருக்கும் ஏற்படும் காதல். இந்த கருவே ஒரு காதல் படத்திற்கு போதுமானது. ஆனால் அதற்கு உண்டான திரைக்கதை இல்லாதது வருத்தம் அளிக்கிறது
காதல் படங்களில் நாயகன் நாயகியின் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிகவும் முக்கியம் அந்த வகையில் கதாபாத்திரங்களின் தன்மை அழகாக உள்ளது. ஆனால் கதைக்கு தேவையில்லாத சீன்களும் டிவிஸ்ட்களும் படத்தின் திரைக்கதையை வலுவிழக்க வைத்திருக்கிறது.
அவர் அங்கு பிழைப்பாரா மாட்டாரா என்ற பதட்டம் ஆடியன்ஸிற்கு கொஞ்சம் கூட வரவில்லை. மாறாக சீக்கிரம் படத்தை முடியுங்கள் என்ற சத்தத்தை தான் கேட்க முடிந்தது.
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: