ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர தாயாரிப்பாளர்கள் முன்வைக்கும் 10 கோரிக்கைகள் | InandOut cinema
சென்னை: தியேட்டர்களில் படம் திரையிடலுக்கு தேவைப்படும் டிஜிட்டல் சேவைகள் வழங்கும் கியூப் மற்றும் யூ.எஃப்.ஓ நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான சுமுகமான முடிவும் எட்டப்படததால் மார்ச் 1 (இன்று) முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழி படங்கள் வெளிவராது என்று 4 மொழி தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவுத்திருந்தது..
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
1. மார்ச் 1 முதல் புதுப்படங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்.
2. புதிய படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் மூலம் தெரிவித்தல். இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு முடித்துக் கொடுக்க வேண்டும்.
3. Digital Service Providers-உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாமான வகையில் எந்தவித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு எந்த வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
4. இதுவரை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. Handling Charges மட்டுமே செலுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
5. VPF - Virtual Print Fee or Digital Print Fee என்பதாகும், இது வேறு ஒன்றுமில்லை திரையரங்க உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமாக Projector வாங்கி வைக்காமல் Digital Cinema Service Providers என்று அழைக்க கூடிய Qube, UFO, Scrabble, PXD, Pro-V, Areox போன்ற நிறுவனங்களிடம் வாடகைக்கு எடுத்து அவர்களது திரையரங்கில் நிறுவியுள்ளார்கள். அந்த வாடகையை அவர்கள் கட்டாமல் தயாரிப்பாளர்களை கட்ட வைக்கிறார்கள். அந்த கட்டணம் தான் VPF ஆகும்.
6. திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server-ஐ சொந்தமாக வைத்து கொள்ள வேண்டும். அந்த திரையரங்குகளில் சொந்தமாக மட்டுமே திரைப்படங்கள் வெளியீடு செய்வது என்று முடிவெடுக்கபட்டுள்ளது.
7. தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டு என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கங்கள், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு, தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம்.
8. இந்த பிரச்னை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த ஒரு குழு அமைத்தல் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
9. மார்ச் 1 (இன்று) முதல் திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்று சங்கம் எடுத்த முடிவுக்கு தாரிப்பாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். மேலும், புதிய திரைப்படங்கள் வெளியீடு சம்பந்தமாக விளம்பரங்கள் டீசர், ஆடியோ ரிலீஸ் போனற எந்த ஒரு நிகழ்ச்சியினையும் நடத்துவதாக இருந்தால் நமது சங்கத்தினை தொடர்புகொள்ள வேண்டும்.
10. தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த நலன் கருதி நமது சங்கம் முடிவெடுத்திருக்கும். இந்த தருணத்தில் இதை மீறும் எந்த ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் தொங்கி உள்ளது. இதனை விரைவில் முடிவுக்குகொண்டு வரவேண்டும் என்று திரைப்பட தொழிலாளர்கள் கேட்டுகொண்டுள்ளனர்...............
மேலும் சுவாரசியமான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: