2.0 படத்தில் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கு: இருக்குனர் ஷங்கர் | InandOut cinema
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி உள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் படபிடிப்பு பணிகள் முடிந்து, VFX mixing பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இதனால், படத்தின் ரிலீசும் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது.
இதனால், ரஜினி ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸ் ஆகுமோ என்ற எதிர்பார்ப்பில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் 2.0 படத்தின் டீசர் இணையத்தளத்தில் திருட்டு தனமாக ரிலீஸ் ஆகி மாஸ் வைரல் ஆனது.
பல நாட்களாக 2.0 படத்தின் டீசருக்காக காத்திருந்த ரஜினி ரசிகர்கள் டீசரை பார்த்து மிரண்டு போய்விட்டனர். (படக்குழுவினரும் தான்)
லண்டனில் லைகா குழுமத்தின் டெலிகாம் நிறுவனத்தில் தயாரிப்பாளர் தரப்பிற்கு டீசரை போட்டு காட்டும்போது, யாரோ அதை செல்போனில் விடியோ எடுத்து முறைகேடாக இணையத்தில் லீக் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க விரும்பாத இயக்குனர் சங்கர் ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதத்தில் 5 நிமிடம் ஓடக்கூடிய VFX making விடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார். விடியோவை பார்க்கும் போது இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.
வீடியோ உள்ளே Click Here
மேலும் சுவாரசியமான சினிமா தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
Tamil Web Media News @whatsapp 7338789767




No comments: