Most Recent News in Whatsapp

Most Recent Cinema News Tamil Web Media NewsTamil Web Media News @whatsapp 7338789767

ஒரு குறும்படம் தான் என் வாழ்க்கையை மாற்றியது - மோகன் ராஜா | InandOutcinema

ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்பட விழா சென்னையில் வரும் பிப்ரவரி 18 முதல் 24 வரை நடக்க இருக்கிறது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 140 நாடுகளின் 370 குறும்படங்களில் இருந்து 127 குறும்படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் இந்த குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழா பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் மோகன்ராஜா கூறியதாவது : 
Director mohanrajaவேலைக்காரன் படத்துக்கு பிறகு மீடியா எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டது. பிரஸ், மீடியா மீது மரியாதை அதிகம் ஆகியிருக்கிறது. குறும்படங்கள் இயக்கி பின் சினிமாவில் இயக்குனரான பல இயக்குனர்கள் என்னை விட திறமையானவர்கள். என்னை வாழ வைத்ததே 1999ல் நான் செய்த பழைய கதை என்ற குறும்படம் தான். அது தான் என்னை எனக்கே யாரென காட்டியது. அதை வாய்ப்பு கிடைத்தால் யூடியூபில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்ததால் குறும்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் இன்று அந்த வாய்ப்பு எல்லோருக்கும் சாதாரணமாக கிடைத்திருக்கிறது. 1995ல் நடந்த சர்வதேச குறும்பட விழா என் வாழ்வை மாற்றியது. மும்பையில் நடக்கும் குறும்பட விழாக்கள், திரைப்பட விழாக்களை விட மிகவும் பிரசித்தி பெற்றது. அது கொடுத்த புத்துணர்ச்சியால் தான் நான் இன்று திரைப்படங்கள் இயக்கி வருகிறேன். நீங்களும் நிறைய சர்வதேச திரைப்படம் மற்றும் குறும்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களை பாருங்கள். Occurrence at Owl Creek Bridges என்ற குறும்படம் மிக சிறப்பாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். 25 வயதுக்குள் தான் புதுமையான எண்ணங்கள் வெளி வரும். அதற்கு பிறகு அரைச்ச மாவையே அரைக்கும் எண்ணம் தான் வரும். காசு கொடுத்தே இந்த விழாவை பார்க்கலாம். அனுமதி இலவசம். அதனால் இந்த விழாவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிறந்த அனுபவமாக இருக்கும் என இயக்குனர் மோகன் ராஜா கூறினார். 








See More Click

mohanraja in director













No comments:

Powered by Blogger.