பாலாவின் ‘நாச்சியார்‘ படம் பற்றி புதுத்தகவல் | IN&OUTCINEMA
பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி. பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ள படம் நாச்சியார். EON Studiosசுடன் இணைந்து பாலாவின் சொந்த நிறுவனமான B Studios இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
சென்னை, ஜன.10: பாலாவின் நாச்சியார் படம் பற்றி புதுத்தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வெளியான நாச்சியார் படத்தின் டீசரை, பார்த்துவிட்டு ரசிகர்கள் ஒரே சமையத்தில் பாராட்டியும், தீட்டியும் தீர்த்துவிட்டனர். குறிப்பாக படத்தில் வரும் அந்த சர்ச்சைக்குறிய ‘வார்த்தை’ பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.
இந்நிலையில், இந்த படத்தை அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்ச்சி அளித்துள்ளது.
பாலா படம் என்றாலே அதற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும். இந்த படத்தில் நடிகை ஜோதிகா முதல் முறையாக அவர் இயக்கத்தில் நடித்துள்ளதால் படத்துக்கான ஹைப் இன்னும் கூடியிருக்கிறது. பாடல் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Naachiyaar Movie Audience (Vs) Movie Reviewers | Review Punches To Naachiyaar Movie Reviewers
மேலும் தகவலுக்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
Tamil Web Media News @whatsapp 7338789767




No comments: